Saturday, September 14, 2013

கவிஞருக்கும் MSVக்கு நடந்த போட்டியென்ன? #PPPS 264


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு (ஒரு வரி பாடலும் சேர்த்து) இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.

அது மட்டுமில்லாம இந்தப் பாடல் உருவானபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றையும் சொல்லுங்களேன்.

 

9 comments:

  1. Van nila nila alla.... Pattina pravesham. @jimmuboy

    ReplyDelete
  2. படம்: பட்டினப் பிரவேசம்

    பாடல்: வான் நிலா நிலா அல்ல

    ReplyDelete
  3. வான் நிலா நிலா அல்ல பாடல்.. பட்டினப் பிரவேசம் படத்துலருந்து..

    ReplyDelete
  4. வான் நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம்

    ReplyDelete
  5. முதலில், வாழ்த்துக்கள் இளா...MSV வாரத்துக்கு!
    வாரம் முழுதும் பதில் சொன்ன அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன" Mode தான் எனக்கு #PPPSஇல்:)
    ஆனால் MSV என்பதால்..
    இன்று, அந்த Invisble Modeஐச் சற்றே உடைக்கிறேன்; "கண்ணதாசன்-MSV" பின்னணி ரகசியத்தை எவருமே சொல்லலையே:( என்னைப் பின்னூட்டம் இட வைக்குறாங்குளே!:))
    --------

    பட்டினப் பிரவேசம், பாலச்சந்தர் இயக்கிய படம்!
    அப்போது கண்ணதாசனுக்கு ஏகப்பட்ட வாழ்வுப் பிரச்சனைகள்; தேடி வரும் சினிமா வாய்ப்புகளைக் கூட ஒதுக்கி, ஓடுங்கிய காலம்!

    ஆனா, இந்தப் படத்துக்குக் கண்ணதாசன் தான் பாட்டெழுதணும் என்பது பாலச்சந்தர் வற்புறுத்தல்!
    கிட்டத்தட்ட தவம் கெடக்குறாரு! அதனால், நம்ம கவிஞர் மனமிரங்கி, "வேண்டா வெறுப்பா" எழுத ஒத்துக்கறாரு!
    ஒரு தாளின் பின் பக்கம் ஏதோ கிறுக்கியும் கொடுத்து விடுகிறார்:)

    ஆனா, படத்தின் இசையமைப்பாளர் MSV க்கு, ஏனோ அந்தக் கிறுக்கிய பாட்டில் இ’ஷ்’டமே இல்லை!
    கண்ணதாசன் பிடிவாதமும் நல்லாத் தெரியும்! அதுவும் உயிர் நண்பனான தன் கிட்ட மட்டும், "பிடிவாதம் இன்னும் அதிகம்" -ன்னும் தெரியும்:))

    ஒரு நல்ல நட்பு, "நண்பன் சோகத்தில் ஆழும் கட்டத்தில்" என்ன செய்யும்???
    = எப்படிச் செஞ்சா, அவன் அதிலிருந்து மீளுவானோ, அதைச் செய்யும்!
    = அப்படிச் செய்யும் போது, தன் மேல் எரிஞ்சி விழுந்தாலும், தன்னையே ஒதுக்கி வச்சாலும், அப்பவும் அந்த "மீட்கும் முயற்சி"யைச் செய்யும்!

    என்ன செய்தார் MSV?

    ReplyDelete
  6. பட்டினப் பிரவேசம் - வான் நிலா நிலா அல்ல....

    ReplyDelete
  7. வெறுந்தாளில் எழுதிக் குடுத்த.. கண்ணதாசன் பாட்டு நல்லா இல்லை -ன்னு சொல்லிட்டாரு MSV:)

    பத்திக்கிச்சு!:)))

    "Challenge" brings forth a Man, back to life!
    இது கண்ணதாசனுக்கு மிகவும் பொருந்தும்!

    கெஞ்சினால் கூட நடவாதது, சவால் விட்டா, கவிஞரிடம் நடக்கும்! = இது MSV என்ற "நண்பனுக்கு" ம்ட்டுமே தெரியும்:)) #தன்மானமிகுதி
    அத்தனை சொந்தப் பிரச்சனயும் தூக்கி வச்சிட்டு, விறு விறு என்று Studio க்கு வந்து விட்டார் கண்ணதாசன்!!

    என் பாட்டு நல்லா இல்ல-ன்னு சொன்னியாமே விசு?
    ஆமாம் கவிஞரே! மெட்டுக்குப் பொருந்தலை!

    உன் பாழாப் போன மெட்டைத் தான் சொல்லேன்!
    ந - நன்னா - நன்னா - நனா

    டேய், இதுவொரு மெட்டா? நீ கண்டதையும் போடுவ; அதுக்கெல்லாம் எவன் தமிழ்ச் சொல்லைப் போட்டு நிரப்புறது? முடியாது போடா!
    பாலச்சந்தருக்குப் பகீர்-ன்னு ஆயிருச்சி; எங்கே கஷ்டப்பட்டுக் கூட்டியாந்த கண்ணதாசன் கழண்டுப்பாரோ? -ன்னு பயம்:)
    ------

    ஆனா MSV மெட்டும் அற்புதமா இருக்கு! பாலச்சந்தர் MSV-யிடம், "கொஞ்சம் நயமாத் தான் பேசி Adjust பண்ணுங்களேன்? எப்படியும் பாட்டை வாங்கிருங்க" -ன்னு சொல்லிட்டு, தான் கழண்டுக்கிட்டாரு:)

    "நயம்" எல்லாம் கவிஞரிடம் செல்லாது; Prick his Ego:)
    இந்தச் சாதாரண மெட்டுக்கே பாட்டெழுத முடியலையா ஒங்களால? என்ன கவிஞரே இது? வேற கடினமான மெட்டைக் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?

    என்ன மெட்டுறா அது?
    ல - லல்லா - லல்லா - லலா

    டேய் நகரத்தை லகரமாக்கிட்டா, மெட்டு கடினமா? பாக்குறியா என் தமிழை? -ன்னு கண்ணதாசன் -ன்னு பொசுக்குன்னு, பேப்பர் இல்லாம, வாயாலயே சொல்ல ஆரம்பிச்சிட்டாரு!

    வான் நிலா..நிலா அல்ல
    உன் வாலி..பம் நிலா

    மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
    பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

    தெய்வம் கல்லிலா? ஒரு
    தோகையின் சொல்லிலா?
    பொன்னிலா? பொட்டிலா?
    புன்னகை மொட்டிலா?

    -ன்னு ஒரே லா லா -ன்னு, நிலாவாக் கொட்டுது!:))

    ஓடியே சென்று கவிஞரை அணைத்துக் கொண்டார் MSV!
    "டேய், துன்பத்திலும் ஒனக்கு ஆறுதல் தமிழே! ஒதுங்கீறாத" -ன்னு ஒரேயொரு பேச்சு!

    நண்பனுக்கு, கோவமே/எரிச்சலே வந்தால் கூட...
    நண்பனாய், ஒரு நாளும் நண்பனை விடாத MSV!!!







    ReplyDelete
  8. எத்தினி பாட்டுக்கு, உன் கவிதைக்கேற்றபடி Tune போட்டிருக்கேன்?
    இப்போ, என் Tune-க்கு, நீ மட்டும் பாட்டு எழுத மாட்டியா? -ன்னு உரிமையோடு கேட்டதாகவும் சொல்வார்கள்!

    ஆனா, அந்த "நகரத்தை-லகரமாக" மாத்தியது தான், பாட்டின் வெற்றிக்கே காரணம்!:)
    "ல-லா" மெட்டு என்னடா மெட்டு, பாட்டே "ல-லா" தான், கொட்டிப்புட்டாரு கவிஞரு!:)

    நிலா என்ற தமிழ்ச் சொல்லழகு!
    அதை "இயைபு"த் தொடையாக்கி, வானிலா, தேனிலா, பொட்டிலா, பூவிலா.. -ன்னு பல லா-க்கள்!

    எனக்கு மிகவும் பிடிச்ச ஒரு வரி:
    இன்பம் கட்டிலா?
    அவள் தேகக் கட்டிலா?
    -ன்னு அவள் தேகக் கட்டையே, கட்டில் ஆக்க, கண்ணதாசனால் மட்டுமே முடியும்:)

    முடிக்கும் போதும்..
    எண்ணிலா வெண்ணிலா-ன்னே முடிப்பாரு!
    எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
    அதைச் சொல்வாய் வெண்ணிலா!!
    --------

    வாழ்க்கை வழியிலா? -ன்னு காதல் பாட்டிலும் "தத்துவம்" வைக்கும் கவிஞர்!
    வாழ்க்கை = வழியிலா?
    = ஊரிலா?
    = நாட்டிலா?
    = வீட்டிலா?
    = நெஞ்சின் ஏட்டிலா?

    நெஞ்சின் ஏடு தான் = உன்னத காதல் வாழ்வு!
    இதைத் தான் சங்கத் தமிழும் சொல்லுது!

    ஆனா, அதை இலக்கியம் என்று ஒப்பும் பண்டிதர்கள், காலம் மாறி, சினிமாப் பாடல்களும் இலக்கியம் தான் என்றொரு காலம் வரும்!
    அப்போது, கண்ணதாசன் சினிமாப் பாடல்களும் பாடநூலில் ஏறும்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. யாராவது சொல்லுவாங்க அப்படின்னு காத்திருந்தேன் நன்றி!

      Delete