இந்த வாரம் அறிமுக வாரம். ஒரு நடிகரோ, இயக்குநரோ, தொழில்நுட்ப வல்லுனரோ அறிமுகமான படத்தினை அடிப்படையாக வைத்து துப்புப்படம் செய்யப்பட்டுள்ளது. படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: இந்த நடிகர் அறிமுகமானது என்னமோ இந்தப் படத்தில்தான் என்றாலும், ஆனால் பிரபலமானது சூப்பருக்கு தம்பியாக நடித்தபோது. இடைவெளிவிட்டு மீண்டும் பிரபலமானதும் சூப்பருடன் நடித்தபோதுதான், அதுவும் வில்லனாக. இந்தப் படத்தில் ஒரு பாட்டு உண்டு, வானொலி அந்தப் பாட்டை ஆடி 18 அன்று கட்டாயம் ஒளிபரப்பும்(அந்தக்காலத்தில்).
படம் வெளியான ஆண்டு 197*
இன்றைய கேள்விகள்:
- அந்த புகழ்பெற்ற நடிகர் யார்?
- படத்தின் பெயர் என்ன?
