Showing posts with label 1984. Show all posts
Showing posts with label 1984. Show all posts

Tuesday, December 24, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் - இன்றே கடைசி #PPPS 365

365 நாட்கள் ஆயிற்று.

ஆம், இன்றே இப்படம் கடைசி. சொக்கன்வானதி, ச்சின்னப்பையன் ஆகியோரைத் தொடர்ந்தே இப்படிப்பட்ட பதிவொன்றை எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அவர்களுக்கு நன்றி. இந்தப் பதிவு ஆரம்பித்ததிலிருந்து 2 முறை வேலை மாறினேன், ஒரு முறை 1800 மைல்கள் தள்ளி வேறொரு இடத்திற்குச் செல்லவேண்டிய கட்டாயம், மற்றொரு முறை 1600 மைல்கள். என் தாயின் மரணம், ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆனது என பல மற்றங்களிடையேயும் இந்தப் பதிவை தொடர்ந்து எழுதி வர சில நல்லுல்லங்களும் காரணம், அவர்களுக்கும் நன்றி.

ஒரு வருடம்... ஏன் தொடர்ச்சியாக என்னால் 3 மாதம் காலம் வரை எதையும் செய்ய முடியாது என்கிற அபிப்பிராயத்தை உடைத்ததும் இந்தப் பதிவுதான்.
தொடர்ச்சியாக பங்கேற்ற ராமாராவ், ஜெயசிரி, பிர்யா, சுசி, விமல், மற்றும் சிலருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.


இன்றைய பதிவின் படம் இதோ.



இராமநாராயணன் இயக்கிய இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 198*.

இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வந்ததும் இதுவே. அது என்ன படம்?

***முற்றும்***



Tuesday, December 10, 2013

அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் #PPPS 351


இந்த வாரம் அறிமுக வாரம். ஒரு நடிகரோ, இயக்குநரோ, தொழில்நுட்ப வல்லுனரோ அறிமுகமான படத்தினை அடிப்படையாக வைத்து துப்புப்படம் செய்யப்பட்டுள்ளது. படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: இந்த நடிகரின் தந்தை ஒரு புகழ் பெற்ற இயக்குநர். அவரது அம்மாவும் ஒரு பாடகி/தயாரிப்பாளர். இவரது மாமா ஒரு பாடகர்/பிரபல பிண்ணனி குரலோன். இவரது சொந்தக்காரர் ஒருவரும் கதாநாயகன், ஆனால் கிரிக்கெட்டினால் புகழ் பெற்றவர்.  

படம் வெளியான ஆண்டு 198*

இன்றைய கேள்விகள்: 
1) அந்த புகழ்பெற்ற நடிகர் யார்? 
2) படத்தின் பெயர் என்ன?